ஒரு கோடியே 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் தொகையுடன், இந்திய நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (04) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
53 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 1.50 மணியளவில் சென்னையில் இருந்து வந்த சந்தேகநபர் தனது பயணப்பொதியில் கொண்டுவரப்பட்ட சேலைகளுக்கு இடையில் குறித்த ஐஸ் போதைப்பொருளை சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு கிலோ 70 கிராம் எடையுடைய ஐஸ் போதைப்பொருள் தொகை இதன்போது கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இலங்கை சுங்கப்பிரிவினால் மேற்கொள்ளப்படுகிறது.

