குச்சுவெளி கடலில் வெடிப்பொருட்கள் மீட்பு

245 0

திருகோணமலை – குச்சுவெளி கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

குறித்த கடற் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக மிதந்து கொண்டிருந்த பொதியை மீட்டு சோதனைக்குட்படுத்திய போதே இவ்வாறு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பொதிக்குள் 4 டெடனேட்டர்கள் உள்ளிட்ட  60 கிராம் வெடி மருந்து என்பன மீட்க்கப்பட்டுள்ளன.

கடற்படையினரால் இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.