நாயாறு வரலாறு தெரியாது ஞானசார தேரரும், எஸ்.பி.யும் பேசக் கூடாது!

348 0

முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தின் உண்மையான வரலாற்றை அறிந்துகொள்ளாமலே ஞானசார தேரரும், எஸ்.பி.திஸாநாயக்கவும் அங்கு இந்துக்கோவில் ஒன்று இருக்கவில்லை என்று கூறுகின்றனர். அவர்களுடைய கருத்துக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் இந்துக்கோவில் ஒன்று இருக்கவில்லை என்றும் ஆரம்பத்திலிருந்தே அது பௌத்தர்களின் வணக்கத்திற்குரிய இடமாகவே காணப்பட்டது என்றும் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் கருத்தை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவும் கூறியிருந்தார். இந்நிலையில் சர்ச்சைக்குரிய இவ்விவகாரத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.