மொறட்டுவ, எகொடஉயன பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்றைய தினம் காலி 11.30 மணியளவில் கெரலவெல்ல பிரதேசத்தில் 62 போத்தல்களில் காணப்பட்ட 46,500 லீட்டர் சட்டவிரோத மதுபானடத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏகொடஉயன பொலிசார் குறிப்பிட்டனர்.
மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ரஞ்சன் லலித் குரே என்ற சந்தேக நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏகொடஉயன பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

