காவிரி படுகை ஆக்கிரமிப்புகளை மீட்க வல்லுநர் குழு அமைக்க வேண்டும்: மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன்

201 0

ஆக்கிரமிப்புகளில் உள்ள காவிரி ஆற்றுப் படுகைகளை மீட்க தனி யாக வல்லுநர் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் மன்னார் குடி எஸ்.ரெங்கநாதன் வலியுறுத்தி உள்ளார்.

ஈஷா யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவ், கர்நாடகம் மற்றும் தமிழ கத்தில் காவிரி வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங் களில், அந்தந்த பகுதி விவசாயி களையும் உள்ளடக்கி, அடுத்த 12 ஆண்டுகளில், 242 கோடி மரங் களை வளர்த்தெடுக்க இலக்கு நிர்ணயித்து, காவேரி கூக்குரல் இயக்க விழிப்புணர்வுப் பிரச்சாரப் பேரணியை செப்.4-ம் தேதி தலைக் காவிரியில் தொடங்கி, செப்.17-ம் தேதி சென்னையில் நிறைவு செய் தார்.

இவரது முயற்சிக்கு காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க மும் ஆதரவு தெரிவித்தது.

இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

காவிரி ஆற்றுக்கு மிகப்பெரிய படுகைகள் இருந்தன. வெள்ள காலங்களில் வெள்ள நீரானது, ஆற்றின் படுகைகளிலேயே தேங்கி நிற்கும். அதைக் கரையிலிருந்து பார்க்கும்போது, கடல்போலத் தெரியும். அந்த அளவுக்கு அகல மான படுகை நிலங்களைக் கொண் டது காவிரி ஆறு.

மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வெள்ளம் வராமல் இந்த படுகை கள்தான் பாதுகாத்து வந்தன. இந்தப் படுகைகளில் மரங்களை அடர்த்தியாக வளர்த்திருப்பார்கள். இந்த மரங்கள் தான் ஆறுகளுக்கான பாதுகாப்பு கவசமாகவும் இருந்தன. காலப்போக்கில், மரங்கள் வெட்டப் பட்டு, ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டன. இதன் காரணமாகத்தான், வெள்ள பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில், ஈஷா யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவ், காவேரி கூக்குரல் இயக்கத்தைத் தொடங்கி, 242 கோடி மரங்களை உருவாக்கும் திட்டத்தை உருவாக்கியிருப்பது நல்ல பலனைத் தரும். குறிப்பாக, ஆற்றை ஒட்டிய நஞ்சை நில விவசாயிகள் தங்களது விளைநிலங் களின் ஒருபகுதியில், பலன் தரும் மரங்களை நடுவதன் மூலம் அவர் களின் பொருளாதாரமும் மேம்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இத் தகைய திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகளும் உதவ வேண்டும்.

காவிரி ஆற்றுப் படுகைகள் மற்றும் அனைத்து நீர் வழித் தடங்களும் தற்போது ஆக்கிரமிப் புக்கு உள்ளாகியிருக்கின்றன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆற்றுப் படுகைகளையும், நீர் வழித் தடங் களையும் மீட்பதற்கு தனியாக வல்லுநர் குழு ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

மீட்கப்பட்ட படுகை நிலங்களில், மரக்கன்றுகளை நடச் செய்து, ஆற்றுப்படுகையை வலுப்படுத்த வேண்டும். இதை சாத்தியப்படுத்த விவசாய சங்கங்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், இயற்கை ஆர் வலர்கள் ஆகியோருடன் அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.