அரசு மருத்துவமனை கட்டினால் 1000 மருத்துவர்களை நாங்கள் தருகிறோம்

214 0

“அதிகாரிகளும், அமைச்சர்களும் மக்களுக்கு கொடுத்த உறுதிப் பாட்டின்படி மருத்துவமனையை கட்டிக்கொடுக்கட்டும். கட்சியின் மருத்துவ அணி மருத்துவர்கள் 1000 பேர் சுழற்சிமுறையில் பணி யாற்றுவார்கள்” என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பழவேற்காடு பகுதியில் உள்ள லைட்ஹவுஸ் குப்பம் ஊராட்சியில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடை பெற்றது. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார். பிறகு செய்தியாளர்களிடம் கமல் ஹாசன் தெரிவித்ததாவது:

பழவேற்காட்டில் போதிய மருத் துவ வசதி இல்லை என்கின்றனர். அதுகுறித்து, பொதுமக்களிடம் பேசிய அதிகாரிகளும், அமைச்சர் களும், “மருத்துவமனை கட்டித் தரப் படும். ஆனால், மருத்துவர்களுக்கு சம்பளம் கொடுக்க கட்டுப்படியா காது” என்று தெரிவித்துள்ளனர். ஆகவே, 50 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கும் பழவேற்காடு பகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாதம் ஒருமுறை மருத்துவ முகாம் நடத் தப்படும்.

 

அரசு அதிகாரிகள், அமைச்சர் கள் கொடுத்த உறுதியின்படி, மருத் துவமனை கட்டிடங்களை கட்டிக் கொடுத்தால், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மருத்துவ அணியில் உள்ள 1000 மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். அரசே மக்கள் சம்பந்தப்பட்டது தான். சம்பந்தம் இல்லாமல் போனால் அரசு நீங்கும்; நீக்கப்பட வேண்டும். நீங்கும் என்பது இயற்கை. அது நடந்தே தீரும்.

பழவேற்காடு ஏரிக்கு சின்ன பாதிப்பு ஏற்பட்டாலும், பழவேற் காடு பகுதி மக்கள் மற்றும் சென்னை நகர மக்கள் என, ஒரு கோடியே 50 ஆயிரம் பேரின் வாழ்க்கை பாதிக் கப்படும். மொழிப் பிரச்சினையில் அரசு கவுரவமாக பின்வாங்கியது போல, தனியார் துறைமுகம் விரி வாக்க விஷயத்திலும் செயல் படவேண்டும்.