ஆரம்ப பாடசாலை கல்வியை இலவசமாக வழங்குவதாக சஜித் உறுதி

292 0

நாட்டில் ஆரம்ப பாடசாலை கல்வி துறையை அரசாங்கத்திற்கு பொறுப்பேற்று அதனை இலவசமாக வழங்க எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளார்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள சிறுவர்களுக்காக செய்யப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

நாட்டில் உள்ள விலைமதிக்க முடியாத செல்வம் சிறுவர்கள் எனவும், ஆகவே அவர்களை பாதுகாப்பது பொறுப்பு வாய்ந்த அனைவரதும் கடமை எனவும் அவர் கூறினார்.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படுகின்ற தண்டனையை ஒத்த தண்டனை ஒன்றை, சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கும், வெளிப்படையான நீதிமன்றச் செயன்முறையூடாக பெற்றுத் தரவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆரம்ப பாடசாலை கல்வியை அனைத்து பிள்ளைகளும் சுதந்திரமாகவும், இலவசமாகவும் கற்பதற்கான சந்தர்பத்தை வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் ஆரம்ப பாடசாலை கல்வியை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதும் தனது எதிர்பார்ப்பு என ஐக்கிய தேசியக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.