மக்களின் நலனுக்காக கட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின் இன்னும் 20 வருடங்கள் தேவை என அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தாவில் நேற்று (30) நடைபெற்ற ஐ.தே.கவின் அமைப்பாளர் மற்றும் மாவட்ட முகாமையாளர்கள் கூட்டத்தில் பங்றே;று உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டில் இல்லாது செய்யப்பட்ட ஜனாநாயகத்தை மீண்டும் ஸ்தாபித்தமை ஐக்கிய தேசியக் கட்சி செய்த முக்கிய விடயம் என கூறினார்.
´கட்சி என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம் அதற்கமைய கட்சியில் உள்ள அனைவரும் ஒன்றாக கைகோர்த்து முன்னோக்கி செல்ல சந்தர்பம் ஏற்பட்டுள்ளது. எதிரணியில் உள்ளவர்கள் ஐ.தே.க.வுக்குள் பிளவு ஏற்படும் என கருதினர்.
கட்சிக்குள் மூன்று, நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுவர் என அவர்கள் எதிர்பார்த்தனர் ஆனால் அவற்றுக்கு இடம்கொடுக்காமல் எமது தலைவர் உள்ளிட்டவர்கள் சரியான தீர்மானம் ஒன்றை எடுத்தார்.
எவ்வாறான சவால்கள் இருந்த போதிலும் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிக்காக பாடுபடுவதே கட்சி என்ற வகையில் எமக்குள்ள மிககெரிய பலம்.
கட்சி என்ற வகையில் பிரிந்திருந்த போது நாம் தோல்வியடைந்தோம் மாறாக ஒன்றிணைந்து செயற்பட்ட சந்தர்பங்களில் நாம் வெற்றியடைந்தோம் ஆகவே கதைவிடுத்து நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.
எமக்கு வெற்றி முக்கியமல்ல அதனையும் தாண்டிய பெரும்பான்மை வெற்றியே எமக்கு அவசியப்படுகின்றது. அதற்காக நாம் வீடுவீடாக சென்று மக்களை சந்திப்பது பொறுத்தமாகும்.
எமக்கு 162 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 78 வீதமானோர் சாதாரணமாகவே வாக்களித்தாலும் மேலும் 65 வீதமானத்தை பெற வேண்டியுள்ளது அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
ஒக்டோபர் மூன்றாம் திகதி நடைபெறும் கட்சியின் சம்மேளனத்தின் பின்னர் ஒகடோபர் 10 ஆம் திகதியில் இருந்து வெற்றிக்கான பிரசாரங்களில் நாம் ஈடுபடவுள்ளோம்´ என்றார்.

