கட்டுப்பணம் செலுத்திய ஜே.வி.பி.

329 0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணி இன்று செவ்வாய்க்கிழமை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள மக்கள் விடுதலை  முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற  உறுப்பினருமான  அனுரகுமார  திஸாநாயக்க இன்று தேர்தலில் போட்டியிடுவதற்கான  கட்டுப்பணத்தை  செலுத்தினார்.

அத்துடன் இன்றைய தினம் நான்கு பேர் கட்டுப்பணம் செலுத்தியதாக  தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்தார்.

மேலும் இன்று வரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக   17  பேர்  கட்டுப்பணம்  செலுத்தியுள்ளனர்.