அர்ஜூன் மகேந்திரன் கையெழுத்திட்ட நாணய தாள்கள் செல்லுபடியாகுமா ?

223 0

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் கையெழுத்திட்ட நாணய தாள்கள் தற்போது செல்லுப்படியாகுமா என்பது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் சட்டவியாக்கியானத்தை அடுத்த வாரம் கோரவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அர்ஜுன மகேந்திரன் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படும் போது அவர் சிங்கப்பூர் நாட்டு பிரஜை .சிங்கப்பூர் நாட்டு பிரஜை பிறிதொரு நாட்டின் குடியுரிமையினை பெற கூடாது என்று அந்நாட்டு சட்டதிட்டங்கள் காணப்படுகின்றது.

அதன் காரணமாக அவர் இலங்கையின் குடியுரிமையினை பெறவில்லை. பிறிதொரு நாட்டு பிரஜை   எமது நாட்டு  அரசியலமைப்பினை  எவ்வாறு மதித்து  குறித்த நியமணங்களை பெற்றுக் கொள்வார். ஆகவே இவரது நியமணம் முற்றிலும் அரசியலமைப்பிற்கு விரோதமானது.

இலங்கையின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய  பதவியேற்காத  பிறநாட்டு பிரஜை ஒருவர் கையெழுத்திட்டுள்ள நாணய  தாள்களே இன்றும் பயன்பாட்டில் உள்ளது. மத்திய வங்கியின்  முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் கைச்சாத்திட்டுள்ள  நாணய தாள்களை பாவிக்கும் போது மத்திய வங்கியின் மீதான நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது. ஆகவே இந்த நாணயங்கள் செல்லுபடியானவையா என்பது தொடர்பில் அடுத்த வாரம்  உயர்நீதிமன்றில் சட்ட வியாக்கியானம் கோரவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.