நாட்டு மக்களின் நலன்களில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை- பந்துல

210 0

அரசியல் பழிவாங்கல் மாத்திரமே தற்போதைய அரசாங்கத்தின் கண் முன்னே நிற்கின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன  குற்றம் சுமத்தியுள்ளார்

பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பந்துல குணவர்தன மேலும் கூறியுள்ளதாவது, “தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், முந்தைய அரசாங்கத்தின் தலைவர்களை பழிவாங்குவதற்காகவே ஊழல் தடுப்பு பிரிவு என்ற ஒரு பிரிவை  உருவாக்கியது.

அதனூடாக அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளை மேற்கொண்டது. தற்போதும் கூட அரசியல் பழிவாங்களுக்காகவே அதிகாரிகளை வழக்கு தொடருமாறு அரசாங்கம் அழுத்தும் கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இவ்வாறு அரசியல் பழிவாங்கலில் மாத்திரமே அரசாங்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றதே ஒழிய நாட்டு மக்களின் நலன்களில் அக்கறை காட்டவில்லை.

மேலும், இந்த அரசாங்கத்தினால் நாட்டு மக்களே மிகவும் துன்ப நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆகையால் தற்போதைய அரசாங்கத்தை வெளியேற்றுவதற்கு ஒரு வாய்ப்பாக நடைபெறவுள்ள தேர்தலை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.