தவறான தீர்மானங்களை சு.க. திருத்திக்கொண்டு பொதுஜன பெரமுனவுடன் இணைய வேண்டும்- ரோஹித

312 0

தேசிய அரசாங்கத்தில் சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து முன்னெடுத்த தவறான அரசியல் தீர்மானங்களை திருத்திக் கொண்டு பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியுடன் சுதந்திர கட்சி மீண்டும் இணைந்தால் சுதந்திரக் கட்சி முழுமையாக இல்லாதொழிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்  சஜித் பிரேமதாஸ பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஒரு தடையல்ல, பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் செலுத்தும் அரசியல் கட்சிகளை ஒன்றினைத்த  கூட்டணி இம்மாதம் 5 ம் திகதி உத்தியோகப்பூர்வமாக   ஸ்தாபிக்கப்படும்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடனாக பரந்துப்பட்ட கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்த வண்ணமே காணப்படுவதாகவும் அவர் கூறினார்.