அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பூர் மாவட்ட செயலாளராக ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். அமமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மேலும், அமைப்பு செயலாளர்களாக திருவான்மியூர் முருகன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.அருளும், தேர்தல் பிரிவு துணை செயலாளராக திருப்பூர் விசாலாட்சியும், மாணவரணி செயலாளராக பரணீஸ்வரனும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

