பெண் கைது- வயிற்றிலிருந்து 52 போதை மாத்திரைகள் மீட்பு!

323 0

டோகாவிலிருந்து வருகை தந்த பிரேஸில் நாட்டுப் பெண் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் 52 கொக்கெய்ன் மாத்திரைகளை விழுங்கிய வண்ணம் நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த குற்றச்சாட்டுக்கு அமையவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தற்போது மேற்படி பெண் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியர்கள் அவரின் வயிற்றிலிருந்து 52 கொக்கெய்ன் மாத்திரைகளையும் மீட்டுள்ளனர்.