காட்டுயானைகளின் தொல்லையால் அவதியுறும் மக்கள்!

316 0

கிளிநொச்சி தருமபுரம்    கிழக்கு  கட்டைக்காடு பகுதியில்  காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதுடன் கடந்த சில தினங்களாக ஊர்மனைகளுக்குள் புகுந்து தென்னைகளையும் ஏனைய பயன் தரு மரங்களையும் அழித்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தருமபுரம் கட்டைக்காடு ஆகிய பகுதிகளுக்குள் புகுந்த காட்டுயானைகள் பயன் தரு தென்னை மரங்களை அழித்துள்ளன.

இதேவேளை கடந்த சில நாட்களாக இரவு வேளைகளில் யானை தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் இரவு விழித்திருக்க வேண்டிய நிலை கானப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அண்மைய நாட்களாக அதிகரித்துள்ள யானைத் தொல்லையால் பெருமளவான பயிர்ச்செய்கைகள் அழிக்கப்பட்;டுள்ளன. என்றும் மக்கள் கவலை  தெரிவிததுளளனர்.