அரச நிர்வாக சேவை அதிகாரிகள் நாளை மறுதினம் முதல் வேலை நிறுத்தம் !

292 0

சம்பள முரண்பாட்டை நீக்குதல் உட்பட கோரிக்கைகளை முன்வைத்து அரச நிர்வாக சேவை அதிகாரிகள் நாளை மறுமதினம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

 

கடந்த 12ம் திகதி முதல் மட்டுப்படுத்தப்பட்ட சேவை நேர தொழிற்சங்க போராட்டத்தை கைவிட்டு நாளை மறுதினம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அரச நிர்வாக சேவை அதிகார சங்கத்தின் தலைவர் ரோஹன டீ சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் வேலை நிறுத்தம் தொடர்பாக தெரிவித்ததாவது,

மட்டுப்படுத்தப்பட்ட வேலை நேர  போராட்டத்தை கைவிட்டு நாளைமுதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறோம். எமது பிரச்சினைகள் குறித்து பல சுற்று பேச்சு வார்த்தைகளைக் அரசாங்கத்திடம் நடத்தினோம் எனினும் எந்த தீர்வும் கிடைக்க வில்லை.

கடந்த 11,12 ம் திகதிகளில் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டோம். அதன் பின்னர் மட்டுப்படுதிகப்பட்ட சேவை நேர தொழிற்சங்க போராட்டத்தில் நடத்தினோம்.

எனினும் எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை.நாம் ஆரம்பிக்கபோகும் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்க படுவதுடன் பெரும் வருமான இழப்பும் ஏற்படும் இதனை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.