புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு அதிமுக ஆதரவு

212 0

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டப் பேரவை தொகுதிக்கான இடைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 60-க்கும் மேற்பட்ட சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, வேட்புமனு தாக்கல் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிடும் வேட் பாளர்களை அதிமுக அறிவித்து விட்டது.

இந்நிலையில், புதுச்சேரி காம ராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நேற்று புதுச்சேரி மாநில நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல் வர் கே.பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது, கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்க சாமி, புதுச்சேரியில் தங்கள் வேட் பாளரை நிறுத்த ஆதரவு கோரினார். இதையடுத்து, அக்கட்சிக்கு ஆதர வளிக்க முடிவெடுத்து ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது, “அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி நேரில் சந்தித்து புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் போட்டி யிடும் தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிக்கும்படி வேண்டுகோள் வைத்தார்.

அதை பரிசீலித்து, அதிமுக சார் பில் முழு ஆதரவு அளிக்கப்படும் என்று தெரிவத்துள்ளோம்’’ என்றார். அப்போது அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.