தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக செங்கல்பட்டு தடத்தில் 29-ம் தேதி 44 ரயில்களின் சேவை ரத்து

242 0

சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் யார்டில் வரும் 29-ம் தேதி (ஞாயிறு) பராமரிப்பு பணி நடக்கவுள்ளது. இதனால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் மொத்தம் 44 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

சென்னை எழும்பூர், தாம்பரம் யார்டில் வரும் 29-ம் தேதி (ஞாயிறு) காலை 11.15 மணி முதல் மாலை 3.15 மணி வரையில் பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை கடற்கரை – தாம்பரத்துக்கு காலை 10.30, 10.40, 10.50,11.10,11.20, 11.30,11.40, மதியம் 12, 12.10, 12.20, 12.40, 1.15, 1.30, 2, 2.30 மற்றும் தாம்பரம் – சென்னை கடற்கரைக்கு காலை 10.45, 10.55,11.15, 11.25, 11.35, மதியம் 12, 12.15, 12.45, 1.30, 1.45, 2.15, 2.30, மாலை 3, 3.10 மணி மினசார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன. சென்னை கடற்கரை – செங்கல் பட்டுக்கு காலை 11, 11.50, மதியம் 12.30, 1, 1.45, 2.15, 2.45, அரக் கோணத்துக்கு மதியம் 12.50 மணி மின்சார ரயில்களும், செங்கல்பட்டு – சென்னை கடற்கரைக்கு காலை 10.55, 11.30, மதியம் 12.20, 1, 1.50, திருமால்பூர் – கடற்கரைக்கு காலை 10.40, காஞ்சிபுரம் – சென்னை கடற்கரைக்கு இரவு 7.15 மணி என மொத்தம் 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப் படுகின்றன.

இதற்கிடைய, பயணிகள் வசதிக்காக மேற்கண்ட நாளில் செங்கல்பட்டு – சென்னை கடற் கரைக்கு காலை 10.55, 11.30, மதியம் 12.20, 1, 1.50 மணிக்கும், காஞ்சிபுரம் – சென்னை கடற் கரைக்கு காலை 9.15, திருமால்பூ ரில் இருந்து காலை 10.40 மணிக் கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படு கின்றன. இதுதவிர, சென்னை கடற் கரையில் இருந்து செங்கல்பட் டுக்கு 6, தாம்பரத்துக்கு 1, அரக் கோணத்துக்கு 1 என சிறப்பு ரயில் கள் இயக்கப்படுகின்றன. இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.