அமைதிப் படையிலிருந்து இலங்கை இராணுவத்தை விலக்குகிறது ஐ.நா.

303 0

ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையிலிருந்து இலங்கை இராணுவத்தை விலக்குவதற்கு ஐ.நா. தீர்மானித்துள்ளது.

இலங்கை இராணுவம் மீது போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதற்கு ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்டவை கடும் எதிர்ப்புக்களை தெரிவித்திருந்தன. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான ஒருவரை இராணுவத் தளபதியாக நியமித்தமையானது பாதிக்கப்பட்டவர்களுக்கான அவமதிப்பாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் பின்னணியில் ஐ.நா.வின் அமைதிப்படையிலிருந்து இலங்கை இராணுவத்தை விலக்குவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.