அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் ஐவர் காயம்

367 0

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

பின்னதுவ மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளுக்கு இடையில், வீதியில் இருந்து வழுக்கிச் சென்று குறித்த வாகன விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் இரண்டு பெண்கள் உள்ளதுடன், காயமடைந்தவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடும் மழை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்குமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.