ஞானசார தேரரை கைது செய்யவேண்டும்

382 0

asath-sallyமுஸ்­லிம்­களின் மனதை புண்­ப­டுத்தும் வகையில் பேசி­வரும் ஞான­சார தேரரை அர­சாங்கம் கைது­செய்­ய­வேண்டும். மஹிந்த காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு இருந்த பிரச்­சினை நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் தொடர்­கின்­றது. ஆனால் அர­சாங்கம் இதற்­கெ­தி­ராக எந்த நட­வ­டிக்­கையும் இது­வரை எடுக்­க­வில்லை என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத் சாலி தெரி­வித்தார்.

அதி­கா­ரத்தை பகிர்ந்து ஐக்­கி­யப்­படும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,ஞான­சார தேரர் நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் வன்­மு­றையை தூண்டும் வகையில் மீண்டும் செயற்­பட்­டு­வ­ரு­கின்றார். கடந்த அர­சாங்க காலத்தில் இவரின் இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கா­ததன் கார­ண­மா­கவே முஸ்லிம் மக்கள் மஹிந்­த­வுக்கு எதி­ராக வாக்­க­ளித்­தனர்.

நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­த­வுடன் இன முரண்­பா­டு­களை தூண்டும் வகையில் எந்த கூட்­டங்­களும் இடம்­பெ­றக்­கூ­டாது என சட்டம் கொண்­டு­வந்­தது. ஆனால் ஞான­சார தேரர் கடந்த ஆட்­சியில் நடந்து கொண்­ட­து­போன்று மீண்டும் செயற்­பட ஆரம்­பித்­துள்ளார்.

அண்­மையில் ஞான­சார தேரர் முஸ்­லிம்­களின் மனதை புண்­ப­டுத்தும் வகையில் உரை­யாற்­றி­யுள்ளார். இதற்கு எதி­ராக அர­சாங்கம் எந்த நட­வ­டிக்­கையும் இது­வ­ரையும் எடுக்­க­வில்லை. அத்­துடன் சர்­வ­தே­ச­ரீ­தியில் 54நாடுகள் இவரின் உரைக்கு கண்­டனம் தெரி­வித்­துள்­ளன. நேற்­றை­ய­தினம் இதற்­கெ­தி­ராக இந்­தி­யாவில் பாரிய ஆர்ப்­பாட்டம் இடம்­பெற்­றுள்­ளது.

மேலும் சகல இன மக்­களும் தங்கள் மத­வ­ழி­பா­டு­களை சுதந்­தி­ராக மேற்­கொள்ளும் சூழலை ஏற்­ப­டுத்­து­வ­தாக தெரி­வித்து ஆட்­சிக்கு வந்த அர­சாங்கம் தற்­போது முஸ்லிம் மக்­க­ளுக்கு ஏற்­படும் பிரச்­சி­னைகள் குறித்து எந்த தீர்­மா­னமும் எடுக்­காமல் இருக்­கின்­றது. அத்­துடன் அர­சாங்­கத்தில் 21முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருக்­கின்­றனர். அவர்­களும் இது­தொ­டர்­பாக பாரா­ளு­மன்­றத்தில் பேச­வில்லை.

மஹிந்த காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற வன்­மு­றைகள் மற்றும் துன்­பு­றுத்­தல்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக் ஷ எந்­த­வித நட­வ­டிக்­கையையும் எடுக்­கா­மை­யினால் அவரால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட இப்தார் நிகழ்வில் பெரும்­பா­லான முஸ்­லிம்கள் அன்று கலந்­து­கொள்­ள­வில்லை. அதே­போன்றே இந்த அர­சாங்­கமும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் வன்­மு­றை­க­ளுக்கு நட­வ­டிக்கை எடுக்­கும்­வரை அர­சாங்­கத்தின் எந்த தேசிய நிகழ்­விலும் கலந்­து­கொள்­ளாமல் இருப்­ப­தற்கு எமது கட்சி தீர்­மா­னித்­துள்­ளது. அதனால் தான் ஜனா­தி­ப­தியின் இப்தார் நிகழ்­விலும் கலந்­து­கொள்­ள­வில்லை. பிர­த­மரின் இப்தார் நிகழ்­விலும் கலந்துகொள்ள மாட்டோம்.

எனவே அரசாங்கம் முஸ்லிம் மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் செயற்பட்டுவரும் ஞானசார தேரரை கைதுசெய்ய வேண்டும். அத்துடன் இதன்பிறகும் இவ்வாறான வார்த்தை பிரயோகங்களை ஞானசாரதேரர் பிரயோகித்தால் உயிரை பணயம் வைத்தேனும் அவருக்கு எதிராக போராடுவோம் என்றார்.

Leave a comment