மாவீர்ர் வெற்றி கிண்ண இறுதி விளையாட்டுப் போட்டடி 2019 நொய்ஸ்,Germany

665 0

யேர்மன் தமிழர் விளையாட்டு கூட்டமைப்பால் தமிழாலயங்களிடையே இந்த ஆண்டு 5 மாநிலங்களில் நடைபெற்ற மாவீர்ர் வெற்றி கிண்ண விளையாட்டுப் போட்டிகளில் மொத்தமாக 1988 மாணவர்கள் பங்கெடுத்து . இறுதி போட்டிக்கென 968 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள் . இவர்களுக்கான இறுதிப் போட்டிகள் 21.9.2019 சனிக்கிழமை நொய்ஸ் நகரில் நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற போட்டிகளில் அணிநடையில் ஆண்கள் பிரிவில் யேர்மன் தழுவிய ரீதியில் 80,5 புள்ளிகளைப் பெற்று 1 வது இடத்தை மேபுஸ் தமிழாலய அணியும்
72 புள்ளிகளைப் பெற்று 2ம் இடத்தை வாறன்டோவ் அணியும்
67,4 புள்ளிகளைப் பெற்று 3ம் இடத்தை எசன் தமிழாலய அணியும் பெற்றுக் கொண்டன

பெண்களுக்கான பிரிவில்
83,4 புள்ளிகளைப் பெற்று 1ம் இடத்தை வூப்பெற்றால் தமிழாலய அணியும்
79,4 புள்ளிகளைப் பெற்று 2ம் இடத்தை வாறன்டோவ் தமிழாலய அணியும் பெற்றுக் கொண்டன.

தொடர்ந்து நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளின் இறுதியில்

யேர்மன் தழுவிய ரீதியில்
305 புள்ளிகளைப் பெற்று 1 வது இடத்தை வாறன்டோவ் தமிழாலயமும்
182,5 புள்ளிகளைப் பெற்று 2ம் இடத்தை மேபுஸ் தமிழாலயமும்.
144,4 புள்ளிகளைப் பெற்று 3ம் இடத்தை வூப்பெற்றால் தமிழாலமும்.

108, புள்ளிகளைப் பெற்று 4ம் இடத்தை எசன் தமிழாலயமும் பெற்றுக் கொண்டன.

இதன் தொடர்சியாக 5.10 சனிக்கிழமை பூப்பந்தாட்டப் போட்டி டுசில்டோவ் நகரில் நடைபெறவுள்ளது.