பருவநிலை மாறுபாட்டை தடுக்க இந்தியா முக்கிய பங்காற்றுகிறது: ஐ.நா. பொதுச் செயலாளர் பாராட்டு

205 0

பருவநிலை மாறுபாட்டை தடுப்ப தில் இந்திய முக்கிய பங்காற்றி வருகிறது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறி யிருப்பதாவது:

ஐ.நா. சபையில் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. ஒவ்வொரு நாடு களின் சார்பில் 193 சூரிய மின் சக்தி தகடுகளை ஐ.நா. சபைக்கு இந்தியா பரிசாக அளித்துள்ளது.

நிலக்கரி பயன்பாட்டை குறைத்து சூரிய மின் உற்பத்திக்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது. மேலும் புதுப்பிக் கத்தக்க எரிசக்திக்கும் முக்கியத் துவம் அளித்து வருகிறது. சர்வ தேச அரங்கில் பருவநிலை மாறுபாட்டை தடுப்பதில் இந்தியா மிக முக்கிய பங்காற்றி வருகிறது.

கார்பன்டை ஆக்ஸைடு வெளி யேற்றத்தைக் கட்டுப்படுத்த சில நாடுகள் அணு சக்திக்கு முக்கியத் துவம் அளித்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவும் அணு சக்திக்கு முக்கியத்துவம் அளிக் கிறது. இதனை ஐ.நா. சபை ஏற்றுக் கொள்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சுவீடன் நாட்டை சேர்ந்த பள்ளி மாணவி கிரேட்டா தன்பர்க், புவி வெப்பமயமாவதை தடுக்க போராடி வருகிறார். இதை வலி யுறுத்தி ஐ.நா. பொது சபை கூட் டத்தையொட்டி அவர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரு கிறார். அவரது தலைமையில் நியூயார்க்கில் நேற்று பேரணி நடைபெற்றது.

அவர் கூறியபோது, “பருவ நிலை மாறுபாடு தொடர்பாக உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க நாள் தோறும் போராட்டம் நடத்தி வரு கிறோம். பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட் டத்தில் பங்கேற்று வருகின்றனர். நமது எதிர்கால சந்ததியினருக்காக பூமியைக் காக்க வேண்டியது அனைவரின் கடமை” என்று தெரி வித்தார்.

தாய்லாந்து, இந்தோனேசியா, கானா, கென்யா உள்ளிட்ட ஆப் பிரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடு கள், அமெரிக்காவை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி யர் பேரணியில் பங்கேற்றனர்.