யாழில் கருவுறுதல் பரிந்துரை நிலையம் திறப்பு

337 0

யாழ். தெல்லிப்பளை கூட்டுறவு வைத்தியசாலை கருவுறுதல் பரிந்துரை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

மகப்பேற்று மருத்துவர் நிலண்ட ரட்னாயக்கவினால் இந்த வைத்தியசாலை இன்று திறந்து வைக்கப்பட்டது.

நைன்வெல்ஸ் வைத்தியசாலையுடன் இணைந்து இயங்கவுள்ள இந்த வைத்தியசாலை மூலம் விந்து பரிசோதனை உட்பட ultra sound பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன. கொழும்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த பரிசோதனைகளை இனிமேல் தெல்லிப்பளை கூட்டுறவு வைத்தியசாலையிலும் மேற்கொள்ள முடியும்.

இந்த திறப்பு விழாவில் பயனாளிகளுக்கு இலவச சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது மருத்துவர் நிலண்ட ரட்னாயக்க தெரிவிக்கையில், “மகப்பேற்று சிகிச்சையை யாழ்ப்பாண மக்கள் பல சிரமங்களின் மத்தியில் கொழும்புக்கு சென்று மேற்கொள்ளும் நிலையில் மக்களுக்கு இலகுவாக யாழ்ப்பாணத்தில் சிகிச்சை நிலையத்தை திறந்துள்ளோம்.

அத்துடன் இந்தியா சென்று பெருந்தொகை பணத்தை செலவு செய்து சிகிச்சையை மேற்கொள்ளவேண்டிய தேவையும் இனிமேல் இல்லை. இங்கேயே குறைந்த செலவில் சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.

குழந்தைப் பேறு வீழ்ச்சிக்கு விவசாய உற்பத்திக்கு பயன்படும் கிருமி நாசினிகளும் ஒரு காரணமாக அமைவதுடன் முதிர்ந்த வயதும் காரணமாக அமைகின்றது.

மேலும் போர் இடம்பெற்ற மண்ணில் போரிற்கு முகங்கொடுத்தவர்கள் என்ற காரணத்தால் அச்ச உணர்வு அவர்களை ஆட்கொண்டதாலும் இந்த விளைவு ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.