கந்தளாய், ரஜஎல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் தனது வீட்டின் பின்புறத்தில் இருந்த போது இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
46 வயதுடைய கந்தளாய் ரஜஎல பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

