வற் வரியில் திங்கட்கிழமை திருத்தம்

440 0

vat_CIமக்­களின் நலனை கருத்­திற்­கொண்டு திங்­கட்­கி­ழமை முதல்வற் வரி விதிப்பில் விசேட திருத்­த­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்­துள்ளார்.பதுளை கிராந்­து­ரு­கோட்டை மகா­வலி விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நடை­பெற்ற சிறு­நீ­ரக நோய் ஒழிப்பு வேலைத்­திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அங்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேலும் உரை­யாற்­று­மை­கயில்,நாட்டின் கடன் சுமை­யி­லி­ருந்து மீளும் வகையில் அர­சாங்­கத்­தி­னால புதிய வற்­வ­ரி­களை அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டி­யேற்­பட்­டது. இருந்­த­போ­திலும் வற் வரி விதிப்­புகள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்னர் நாட்டின் சாதா­ரண பொது­மக்­களின் அன்­றாட வாழ்­கையில் பெரும் அசௌ­க­ரி­யங்­களைக் எதிர்­கொண்­டுள்­ளனர்.

எனவே பொது­மக்­களின் அசௌ­க­ரித்தை கருத்­திற்­கொண்டு மக்­க­ளுக்கு நிவா­ரணம் அளிப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்ளேன். இதன்­பி­ர­காரம் திங்­கட்­கி­ழ­மை­யன்று விசேட வரி திருத்தம் செய்­ய­வுள்ளேன்.அத்­துடன் அர­சாங்க அதி­கா­ரி­களின் வாகன அனு­ம­திப்­பத்­திரம் தொடர்­பாக எழுந்­துள்ள நிலை­மை­களைக் கவ­னத்­திற்­கொண்டு அவர்­களின் இழந்­து­போன சலு­கையை மீண்டும் பெற்றுக்கொடுக்க சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே மக்களின் நலன் கருதியே இவ்வாறான சலுகை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளேன் என்றார்.

Leave a comment