ஐ.தே.க செயற்குழு மீது சந்தேகம்: ஹெல உறுமய அறிவிப்பு

270 0

ஐக்கியத் தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள ஜாதிக ஹெல உறுமய அக்கட்சி வேட்பாளர் அறிவிப்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளதெனவும் தெரிவித்துள்ளது.

ஐக்கியத் தேசியக் கட்சியின் செயற்குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலும் ஹெல உறு​மய விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ஐ.தே.கவின் செயற்குழுவில் அக்கட்சியின் அங்கத்துவம் மாத்திரமே உள்ளது. எனவே சுயாதீன தன்மை தொடர்பான கேள்விக்குரியாகியுள்ளதெனவும் தெரிவித்தார்.

ஐ.தே.க தலைமையிலான முன்னணி அமைக்கப்படுவதில் முரண்பாடுகள் எவையும் இல்லையெனவும், முன்னணியின் வேட்பாளர் தெரிவின் போது, அதில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளினதும் கோரிக்கைக்கும் செவிசாய்க்கப்பட வேண்டியது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.

அதனால், ஐ.தே.முவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் தீர்மானத்தை ஐக்கியத் தேசிய முன்னணியில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளிடம் ஒப்படைப்பதே சிறந்ததெனவும் அறிவித்துள்ளது.