சர்வதேச புத்தகக் கண்காட்சி ஆரம்பம்

297 0

2019ஆம் ஆண்டுக்கான கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி, 21ஆவது தடவையாக, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், இன்று (20), ஆரம்பமானது.

இக்கண்காட்சி, எதிர்வரும் 29ஆம் திகதி வரை, தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும்

இதன் மூலம் புத்தகங்களை சலுகை விலையில் கொள்வனவு செய்ய முடியும். இங்கு 400 உள்நாட்டு கண்காட்சிக் கூடங்களும், 60 வெளிநாட்டு கண்காட்சி கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், எழுத்தாளர்கள் சந்திப்பு, வாசகர்கள் சந்திப்பு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், இராணுவ வீரர்கள் ஆகியோர் சீருடையில் நுழைய  இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள். ஏனையவர்களுக்கு 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.