கட்டுப் பணம் செலுத்திய பொதுஜன பெரமுன!

279 0

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவிற்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை தேர்தல் ஆணைக்குழுவில் பொதுஜன பெரமுனவின்  பொதுச்செயலாளர் சாகர காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர்களான காமினி லொகுகே, உதய கம்மன்பில ஆகியோரும் இன்று செலுத்தினர்.

 

இதில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வேட்புமனுத்தாக்கல் எதிர்வரும் மாதம் 7 ஆம் திகதி  என்று திகதி குறிப்பிடப்பட்டுள்ளதை ஐக்கிய தேசிய கட்சி நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆளும் தரப்பின் வேட்பாளர் இல்லாமல் தனித்து போட்டியிடும் போது  தேர்தலில் ஒரு சுவாரஷ்யம்  இருக்காது. ஆகவே ஐக்கிய தேசிய கட்சி வெகுவிரைவாக  எவரையாவது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க  வேண்டும்.

அத்துடன் பரந்துப்பட்ட கூட்டணி அமைப்பதற்காக பொதுஜன பெரமுனவிற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில்  பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தேவையற்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்  வெற்றியில் பங்குக் கொள்ள வேண்டும்  என்ற நோக்கில் சுதந்திர கட்சி  பொதுஜன  ஜனநாயக முன்னணியுடன் இணைந்துக் கொள்ளலாம் என்றார்.