நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க முயற்சிப்பது ரணிலின் சதி

179 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை தோல்வியடைச் செய்யும் வகையில் எந்தவொரு தீர்மானத்தையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுக்காது என்று பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் மைத்திரி – மஹிந்த ஆகியோருக்கிடையிலான அரசியல் ரீதியிலான ஒன்றிணைவுடன் தேர்தலில் களமிறங்குவோம் என்றும் கூறினார்.

பொரளையில் உள்ள சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட காரியாலய கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பிற்கு ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவளித்தது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிக்கமைய ஜனாதிபதி தனது அதிகாரங்களை குறைத்துக் கொண்டார். எனினும் முழுமையாக அதனை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முயற்சிப்பது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சதியாகும் என்றும் அவர் இதன்போது கூறினார்.