பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

262 0

201610271052311285_six-injured-as-pakistan-violates-ceasefire-again-in-rs-pura_secvpfஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா மற்றும் ஆர்னியா செக்டார்களில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டுவருகிறது. கடந்த மாதம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தி அழித்ததையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. காஷ்மீரில் எல்லையோர பகுதிகளில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் எல்லையோர கிராமங்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த தாக்குதலில் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை ஆர்.ஸ்.புரா மற்றும் ஆர்னியா செக்டார்களில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இன்று காலை கோப்ரா பெல்ட் பகுதியில் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 6 பேர் படுகாயம் அடைந்ததாக இந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

நேற்றும் இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 11 வீரர்கள் படுகாயமடைந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. பாகிஸ்தான் தரப்பில் 3 வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.