வவுனியாவில் திடீரென குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர்!

296 0

வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்பாம் பகுதியில் இன்றையதினம் இராணுவத்தினர் குவிக்கபட்டமையால் பொதுமக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டிருந்தது.

 

இன்று காலை குறித்த பகுதியில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கபட்டு போர்காலத்தை நினைவூட்டுவதுபோல, பெருமளவான துப்பாக்கி ஏந்திய  இராணுவத்தினர் குவிக்கபட்டிருந்தனர். இதனால் பொதுமக்கள் கடும் அச்ச நிலையை சந்தித்திருந்தனர்.

எனினும் குறித்த இராணுவ குவிப்பு பயிற்சி நடவடிக்கைக்காகவே மேற்கொள்ளபட்டதாக தெரிவிக்கபடுகின்றது.

எனினும் இராணுவ பயிற்சி என்ற பெயரில் அப்பகுதி மக்கள் மீது கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாகவும், தமது இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதாகவும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.