‘கோப்’ குழு முன்னால் ஆஜராகுமாறு ஹிஸ்புல்லாவுக்கு அறிவிப்பு

322 0

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனரும் பெட்டிகலோ கெம்பஷின் தலைவருமான எம்.எல்.ஏ.எம் . ஹிஸ்புல்லாவையும், அவரின் மகனையும் அடுத்த மாதம் 9 ஆம் திகதி அரச நிறுவனங்கள் தொடர்பான விசாரணைக் குழுவான கோப் குழுவின் முன் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இருவரையும் நேற்றைய தினம் கோப் குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அவர்கள் இருவரும் வெளிநாடு சென்றிருப்பதால் கோப் குழுவின் முன்னால் ஆஜராகவில்லை. இது குறித்து ஏற்கனவே அவர்கள் கோப் குழுவிற்கு அறிவித்திருந்தனர்.

இந் நிலையில் நேற்று கூடிய கோப்குழு அவ்விருவரையும் எதிர்வரும் அக்டோபர் மாதம் 9 ஆம் திகதி ஆஜராகுமாறு கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி அறிவித்தல் விடுத்துள்ளார்.