ஹங்வெல்ல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

304 0

ஹங்வெல்ல, எம்புல்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நவகமுவ, சமகி மாவத்தை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 9 மில்லி மீற்றர் ரக துப்பாக்கி ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி ஹங்வெல்ல, எம்புல்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றுமொருவர் காயமடைந்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.