மொட்டு சின்னத்தில் அன்றி வேறு சின்னத்தில் போட்டியிடுவது அர்த்தமற்றது-டபிள்யூ.டீ.ஜே செனவிரத்ன

26 0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்தில் அன்றி வேறு சின்னத்தில் போட்டியிடுவதானது அர்த்தமற்றதாகவும் என பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டீ.ஜே செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாபா அபேவர்தனவின் இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.