தாயின் கண் முன் பலியான 10 வயது சிறுவன்

36 0

தொம்பே, தித்தபத்தர பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான்.

மோட்டார் சைக்கிள் ஒன்று கார் ஒன்றின் பின்னால் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரும் இரண்டு சிறுவர்களும் காயமடைந்த நிலையில் தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, 10 வயது குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

மஹவத்த, தித்தபத்தர பிரதேசத்தை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

விபத்தில் காயமடைந்த தாய் மற்றும் அவரின் மூத்த சகோதரன் மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தொம்பே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.