எழுக தமிழுக்காக வவுனியாவில் விழிப்புணர்வுப் பேரணி

59 0

எழுக தமிழ் மக்கள் எழுச்சி போராட்டத்திற்காக மக்களை அணி திரட்டும் முகமாக விழிப்புணர்வு பேரணி ஒன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நகரை அண்டிய பகுதிகளில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியினரால் இந்த பேரணி இன்று (புதன்கிழமை) மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள், தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்தும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் ஒருமித்த நிலை்பபாடு தொடர்பாகவும் அதனை சர்வதேசத்துக்கு எடுத்தியம்பும் வகையிலும் எழுக தமிழ் பேரணி ஒன்றை நடத்த தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பேரணி எதிர்வரும் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள நிலையில் எழுக தமிழ் எழுச்சிக்காக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கையை தமிழ் மக்கள் பேரவை கடந்த 23ஆம் திகதி ஆரம்பித்தது.

இந்த ஆதரவு திரட்டும் நடவடிக்கை வடக்கு கிழக்கின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.