மஹனாம மற்றும் பியதாசவின் வழக்கு மீதான சாட்சி விசாரணை நாளையும்

205 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் அலுவலக பிரதானி பேராசிரியர் ஐ.எம்.கே மஹனாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியவர்களுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று (11) மீண்டும் கொழும்பு மூவரங்கிய நீதாய நீதிமன்ற முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு சம்பத் அபேகோன், சம்பத் விஜேர்தன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்று குறித்த வழக்கின் முதலாவது சந்தேக நபரான இந்திய வியாபாரியான கே. நாகராஜவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலதிக விசாரணைகள் நாளை வரையில் ஒத்திவைக்கப்பட்டது.