நாட்டில் இளம்வயது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

273 0

நாட்டின் இளம்வயது கவர்னர் என்ற சிறப்பை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுள்ளார்.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 1-ந் தேதி 5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை அறிவித்தார். தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு, பதவி ஏற்றுக்கொண்டார். இவர் தான் நாட்டில் உள்ள மாநில கவர்னர்களில் இளம்வயது கவர்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கவர்னர்களின் சராசரி வயது 73 ஆக உள்ளது. பெரும்பான்மையான கவர்னர்கள் 70 முதல் 79 வயதுக்குள் உள்ளனர். மொத்தம் உள்ள 28 கவர்னர்களில் (அசாம், மிசோரம் மாநிலங்களுக்கு ஒரே கவர்னர்) 7 பேர் 60 வயதுகளிலும், 14 பேர் 70களிலும், 6 பேர் 80களிலும் உள்ளனர். ஒருவர் மட்டுமே 60 வயதுக்கு கீழ் உள்ளார். அவர் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தான். அவருக்கு வயது 58.
தமிழிசை சவுந்தரராஜன்

அவருக்கு அடுத்த இடத்தில் குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத் (60) உள்ளார். முதல் முறை கவர்னர்கள் 19 பேர், 9 பேர் பெண்கள். ஆந்திர மாநில கவர்னர் விஸ்வபூஷண் ஹரிசந்தன் தான் அதிக வயதானவர். அவருக்கு வயது 85.