தற்காலிகமாக மூடப்பட்டது அம்மாச்சி உணவகம்

40 0

வவுனியா பேரூந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

திருத்தப்பணிகள் காரணமாகவே இவ்வாறு அம்மாச்சி உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என விவசாய திணைக்களத்தின் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஏ. சகிலா பானு தெரிவித்துள்ளார்.

மலசலகூட திருத்தப்பணி மற்றும் மழை காலங்களில் நீர் தேங்கி நிற்கும் நிலையினை கருத்தில் கொண்டே தற்போது திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீமெந்து வேலைகள் காணப்படுவதனால் உணவு வகைகளை சமைக்கவோ விற்பனை செய்வதோ சிறந்ததல்ல என்ற காரணத்தினால் அதனை சில தினங்களுக்கு மூடி திருத்தப்பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பம்பைமடு வவுனியா வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் அம்மாச்சி உணவகத்தின் கட்டுமானப்பணிகள் தாமதடைந்து வருகின்றமை குறித்து பதிலளிக்க விவசாய திணைக்களத்தின் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஏ. சகிலா பானு மறுப்பு தெரிவித்துள்ளார்.