அமெரிக்காவில் நீதிபதி பதவிக்கு இந்தியர் – டிரம்ப் தேர்வு செய்தார்

197 0

அமெரிக்காவில் நீதிபதி பதவிக்கு இந்திய அமெரிக்கரான அனுராக் சிங்கால் என்பவரை ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தெற்கு மாவட்ட கோர்ட்டில் ஜேம்ஸ் ஐ கோன் என்பவர் நீதிபதியாக இருக்கிறார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது. இதையடுத்து, அவரது இடத்துக்கு இந்திய அமெரிக்கரான அனுராக் சிங்கால் என்பவரை ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.

அனுராக் சிங்காலுக்கு அமெரிக்க செனட்சபை ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் புளோரிடா தெற்கு மாவட்ட கோர்ட்டில் நீதிபதியாகும் முதல் இந்திய அமெரிக்கர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

1963-ம் ஆண்டு நியூஜெர்சி மாகாணத்தில் பிறந்த அனுராக் சிங்கால், 1986-ல் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். அதனை தொ டர்ந்து, 1989-ம் ஆண்டில் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை படித்து முடித்தார்.

அதன்பிறகு புளோரிடாவில் பல்வேறு சட்ட நிறுவனங்களில் பணியாற்றிய அனுராக் சிங்கால், கடந்த 2011-ம் ஆண்டு புளோரிடாவின் 17-வது சர்கியூட் கோர்ட்டில் அரசு வக்கீலாக பணியில் சேர்ந்தார். சர்ச்சைக்குரிய ஒரு கொலை வழக்கில் ஆஜரானது மூலம் அனுராக் சிங்கால் புளோரிடா மாகாண மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.