கிளிநொச்சியில் பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை, பொலிஸார் விஷேட சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த விஷேட சோதனை நடவடிக்கை இடம்பெற்றது.
பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி செல்லும் முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்கள் இதன்போது சோதனைக்குட்படுத்தப்பட்டன.
இதன்போது, குறித்த வாகனங்களின் பாதுகாப்பு தன்மை மற்றும் வாகன சாரதிகளின் அனுமதிப் பத்திரங்கள் போன்றன சோதனைக்குட்படுத்தப்பட்டன.
மேலும், இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்ட வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களில் பிள்ளைகளை ஏற்றி வருதல் தொடர்பாக, பொலிஸார் விஷேட கண்காணிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸாரின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மோட்டர் போக்குவரத்து ஆணையாளர் ஜி.எச்.டி.கே விஜேசேகரவின் பணிப்பின் பேரில், குறித்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

