கொழும்பு துறை­முக நகர திட்­டத்­துக்கு பாரிய மணல் அகழ்வு : நீர்­கொ­ழும்பு கடல்­ பி­ர­தே­சங்­களில் அரிப்பு

198 0

கொழும்பு துறை­முக நகர அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டத்­திற்­காக கடலி­லி­ருந்து பாரிய அளவில் மணல் அக­லப்­பட்­டதன் காரண­மாக மீன­வர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் பல பிர­தே­சங்­க­ளிலும் கட­ல­ரிப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக பிர­தேச மக்கள் குற்றச்­சாட்டு தெரி­விக்­கின்­றனர்.

 

நீர்­கொ­ழும்பில் பிட்­டி­பனை, மோர­வல மற்றும் நீர்­கொ­ழும்பு முதல் கம்மல் தொட்ட பகுதி வரை­யுள்ள  பல இடங்களிலும் கட­ல­ரிப்பு ஏற்­பட்­டுள்­ளது. இதன் கார­ண­மாக வீடுகள் சிலவும் கட்­டி­டங்கள் சிலவும் சேத­ம­டைந்­துள்­ளன.

நீர்­கொ­ழும்பு கொட்­டுவ மைதா­னத்­துக்கு அருகில் அமைந்­துள்ள நீர்­கொ­ழும்பு மீன் விற்­பனை சந்­தையின் பின்­பக்­க­மாக உள்ள  குட்­டித்­தீவு கட­லோரப் பகு­தியில் அமைந்­துள்ள வீடொன்றும் அண்­மையில் கடல் நீர் புகுந்­ததன் கார­ண­மாக சேதமடைந்­துள்­ளது. அத்­துடன் அந்தப் பகுதி கட­ல­ரிப்­புக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக மீன­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

இது­ தொ­டர்­பாக நீர்­கொ­ழும்பு மீனவ செயற்­பாட்­டாளர்  வர்­ண­கு­ல­சூ­ரிய நாமல் பெர்ணாந்து, நீர்­கொ­ழும்பு தேவ­த­யாவ கிரா­மிய மீனவர் சங்­கத்தின் தலைவர் ஜூட் எக்டர், புனித ஜெப­மாலை மாதா கிரா­மிய மீனவர் சங்­கத்தின் தலைவர்  மெக்­ஸிமன்  கூஞ்ஞ உட்­பட பிர­தே­ச­வா­சிகள் சிலர் கருத்துத் தெரி­வித்­தனர்.

 

கொழும்புத் துறை­முக நகர அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டத்­துக்­காக கட­லி­லி­ருந்து பாரிய அளவில் மணல் எடுக்­கப்­பட்­டதன் கார­ண­மாக பிட்­டி­பனை, மோர­வல, குட்­டி­த்தீவு மற்றும் நீர்­கொ­ழும்பு முதல் கம்­மல்­தொட்ட வரை­யுள்ள கடல் பகுதி  மற்றும் திக்­கோ­விட்ட உட்­பட பல பிர­தே­சங்­களில் கட­ல­ரிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

பாரிய அளவில் மணல் கட­லி­லி­ருந்து எடுக்­கப்­பட்­டதன் கார­ண­மாக கடல் வளங்கள் பல அழிந்­துள்­ளன. மீன் உற்­பத்தி குறைந்­துள்­ளது. இதன் கார­ண­மாக சிறு மீன் பிடித்­ து­றை­யினர் மிகவும் மோச­மான முறையில் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். குறிப்­பாக நீர்­கொ­ழும்­பிலும் அத­னை அண்­டிய பிர­தே­சங்­க­ளிலும்  3000 வரை­யான பட­கு­களில் சென்று சிறு மீன்­பி­டியில் ஈடுபடும் மீனவர்கள்  பெரி­தும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலரிப்புக் காரணமாக வீடுகள் பலவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்­நிலை நீடித்தால் இன்னும் சில காலங்களில் மேலும் பல வீடுகள், கட்டிடங்கள்  பாதிக்கப்படும் அபா­ய­முள்­ள­தா­கவும் அவர்கள் குறிப்பிட்டனர்.