பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு : இராணுவ வீரர்கள் உட்பட ஐவர் கைது!

224 0

அக்குரஸ்ஸ, திட்பட்டுவவாயில் பொலிஸார்  மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் இரு இராணுவ வீரர்கள் அடங்குவதாகவும், அவர்களிடமிருந்து இரு ரி – 56 ரக துப்பாக்கிகளையும் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த துப்பாக்கிகள் அண்மையில் பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திலிருந்து காணமல்போன துப்பாக்கிகளாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

அக்குரெஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திப்பட்டுவாவ சந்தியில் கடந்த 06 ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் போக்குவரத்து கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸார், இலக்கு தகடு இன்றி வந்த மூவர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்ட போது, குறித்த மோட்டார் சைக்கிள் நிறுத்தாமல் சியம்பலாகொட வீதிக்குச் திரும்பி தொடர்ந்து சென்றுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர்களை விரட்டிப் பிடிக்கும் நோக்குடன் பொலிஸ் உத்தியேகஸ்தர் இருவரும் தமது கடமை நேர மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து மேட்டார் சைக்கிளில் சென்ற சந்தேக நபர் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவரும் அக்குரெஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

இதன்போது பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சென்ற மோட்டார் சைக்கிளுக்கும் சேதம் ஏற்றபட்டுள்ளது.

இலக்கம் 45950 சாஜன்ட் ஹெமந்த மற்றும் இலக்கம் 72339 கான்ஸ்டபில் நுவன் ஆகிய இருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

சம்பத்தின் பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் , இவர்களை அடையாளம் காணுவதற்காக அக்குரெஸ்ஸ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலும், மாத்தறை பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன இந் நிலையிலேயே இவர்கள் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.