இந்த தேர்தலுக்கான வாக்களிப்பு 47 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இந்த மத்திய நிலையங்கள் எல்பிட்டிய, பிட்டிகல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அமையவுள்ளது. பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கண்காணிப்பின் கீழ் தேர்தல் முடியும் வரையில் மீண்டும் அறிவிக்கும் வரையில் இந்த பொலிஸ் செயற்பாட்டு பிரிவு செயற்படுமென்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகரும் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதோச சபைக்கான தேர்தல் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜெகத் அபேசிறி குணவர்தன சிரேஷ்ட பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை தேசிய பொலிஸ் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது. இதேவேளை எதிர்வரும் தேர்தலை இலக்காக கொண்டு தேர்தல் ஆணையகம் மற்றும் பொலிஸ் தலைமையகம் தற்பொழுது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஏதிர்வரும் தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளருக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று தேர்தல் திணைக்களத்தில் நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.