ஜனாதிபதிக்கான கால எல்லை இவ்வருடம் நிறைவடைகின்றது!

303 0

ஜனாதிபதிக்கான கால எல்லை இவ்வருடம் நிறைவடைகின்றது. எனவே 24 மணித்தியாலங்களும் முயன்றாலும் பாடசாலைகளுக்கான திட்டங்களை திறந்து வைக்க முடியாது.

எனவே வேறு ஏதேனும் மாற்று வழியை சிந்திக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

24 மணித்தியாலங்கள் மாத்திரம் வாகனத்தை செலுத்தும் ஒருவருக்கே அனுமதிப்பத்திரம் அத்தியாவசியமாகக் கருதப்படுகின்ற நிலையில் சுமார் 13 வருடங்கள் வகுப்பறையை கொண்டு செல்லும் ஆசிரியர்களுக்கு தேவையில்லையா எனவும் குறிப்பிட்டார்.

‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை ‘ வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 500 பாடசாலைக் கட்டடங்களை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை கஹாதுட்டுவ – வெனிவெல்கொவ பிரதேசத்தில் உள்ள விஷேட தேவையுடைய பிள்ளைகளுக்கான தேசிய நிறுவனத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் தெரிவித்தாவது :

கடந்த காலங்களில் பெரும்பாலானவர்களுக்கு கல்வி கற்கக் கூடிய வசதிகள் இருக்கவில்லை. நான் கல்வி அமைச்சராக செயற்பட்ட காலத்தில் அனைவருக்கும் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கக் கூடியதாக இருந்தது. முதலாவதாக ஜே.ஆர்.ஜயவர்தன இலவச பாடநூல்களை வழங்கினார். அதே போன்று பாடசாலைகளுக்கான கட்டடங்கள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை என்பவற்றை நிவர்த்தி செய்வதற்காக நடவடிக்கைகள் என்னால் முன்னெடுக்கப்பட்டன.

அதன் போது விஷேட தேவையுடைய பிள்ளைகளுக்கு கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படவில்லை என்பது அறியக் கிடைத்தது. அதற்கிணங்க விஷேட தேவையுடைய பிள்ளைகளுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது அந்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது. யாரையும் கைவிடாது நாம் கல்வியை வழங்கியுள்ளோம்.