21/4 தாக்குதல்கள்: சி.ஐ.டி.க்கு 5 பகுப்பாய்வு அறிக்கைகளை வழங்கிய எப்.பி.ஐ

381 0

21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் பிரதான விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, அந்த பயங்கரவாத சம்பவம் தொடர்பில்  அமெரிக்காவின் எப்.பி.ஐ.விசாரணைப் பிரிவினர் 5 சிறப்பு பகுப்பாய்வு அறிக்கைகளை கையளித்துள்ளனர்.

தாக்குதலையடுத்து விசாரணைகளுக்கு உதவ இலங்கை வந்த எப்.பி.ஐ. குழு, பயங்கரவாதிகளின் தொலைதொடர்பு சாதனங்கள் மற்றும் சில தடயங்களை நீதிமன்ற அனுமதியுடன் எடுத்துச் சென்று முன்னெடுத்த சிறப்பு பகுப்பாய்வு அறிக்கைகள் ஐந்தினையே இவ்வாறு அனுப்பியுள்ளதாகவும், அந்த அறிக்கைகளை மையப்படுத்தி மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர்  பி.எஸ். திசேராவின் கீழ் இடம்பெறும் பிரதான விசாரணைகள் தொடர்பிலான கோவையின் கீழ் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.