தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி புறுக்செல்ஸ் நகரத்தில் ஈருளிப்பயணம் ஆரம்பம்-4.9.2019

201 0

இன்று 4.9.2019 புதன்கிழமை தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி ஐ.நா நோக்கி மிதிவண்டியில் பயணிக்கும் மனித நேயப் பணியாளர்களின் போராட்டம் புறுக்செல்ஸ்  நகரத்தில் ஆரம்பமாகியுள்ளது.

பெல்ஜியம் புறுக்செல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய கொமிசன் முன்பாக ஆரம்பமாகியிருக்கும் இவ் மனிதநேயப் போராட்டம் அங்கிருந்து லட்சம்பேர்க் நாட்டை வந்தடைந்து, பின் யேர்மனி ஊடாக பிரான்சு நாட்டை வந்தடையும். அங்கிருந்து சுவிஸ் நாட்டை வந்தடைந்து, சுவிசின் பல முக்கிய நகரங்கள் ஊடாக ஜெனிவா நகரத்தை 16.9.2019 திங்கட்கிழமை வந்தடையும்.

தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி 16.9.2019 திங்கட்கிழமை ஜெனிவா நகரத்தில் ஐ.நா முன்பு நடைபெறயிருக்கும் ஆர்ப்பாட்டப் பேரணியில் இவ் மனிதநேயப் பணியாளர்களும் இணைந்து கொள்வார்கள்.