ஐ.தே.க.விற்கு எதிரான பலமான கூட்டணியுடன் எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணையுமென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டின்போது நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா, தெளிவான ஒரு உரையை நிகழ்த்தியிருந்தார்.
அதாவது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோரைவிட சிறப்பான கூட்டணியொன்றுடன் ஒன்றிணைந்து தேர்தலில் களமிறங்குவோம் என்று அவர் கூறியிருந்தார்.
அதற்கிணங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான பலமான கூட்டணியொன்றுடன், எதிர்காலத்தில் இணையும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்” என மேலும் தெரிவித்தார்.

