தனி குடும்பத் தீர்மானத்தைக் காட்டிலும் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொள்ளும் தீர்மானம் சிறந்ததென அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சம்பிக்க மேலும் கூறியுள்ளதாவது, “ஒரு தனிப்பட்ட குடும்பம் தேனீர் அருந்திக் கொண்டு நாட்டின் கொள்கையை தீர்மானிப்பதை விட ஐக்கிய தேசியக் கட்சிக்குள் புத்திஜீவிகள் பலரும் இருந்து தீர்மானம் ஒன்றுக்கு வருவது சிறந்ததாகும்.
ஐ.தே.க.வுக்குள் எந்ததொரு நெருக்கடியும் தற்போது இல்லை. ஆனாலும் நாட்டுக்கு தேவையான ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கு இன்னும் அவர்களுக்கு காலம் தேவையாக உள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் வாரங்களில் வேட்பாளர் குறித்த இறுதி முடிவை அக்கட்சி முன்வைக்குமென எதிர்ப்பார்க்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

